பிரபல கார் ஷோரூமின் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து
புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் உள்ள பிரபல கார் ஷோரூமின் சர்வீஸ் சென்டரில் தீ விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உடனடியாக தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஒரு கார் முற்றிலும் எரிந்து சேதமானது.மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
Next Story
