Palani Murugan Temple| பழனி முருகனை பார்க்க குவிந்த பெருங்கூட்டம்
பழனி முருகனை பார்க்க குவிந்த பெருங்கூட்டம்
#palanimurugantemple #diwali
தீபாவளி திருநாளை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் வின்ச் மற்றும் ரோப் கார் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. மலைக்கோவிலில் நெரிசலைத் தவிர்க்க குடமுழுக்கு நினைவு மண்டபம் வழியாக ஒருவழிப் பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் முடித்தவர்கள் படிப்பாதை வழியாக கீழே இறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோவிலில் உள்ளூர் பக்தர்கள் நெய் தீபம் மற்றும் அகல் விளக்குகள் ஏற்றி முருகப்பெருமானை வழிபட்டனர்.
