திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.
திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்
Published on

* கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கலைஞர் நகரை சேர்ந்த அஜீஸ் என்பவருக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வீன் பானு என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

* திருமணம் ஆன நாளில் இருந்தே அடிக்கடி வயிறு வலிப்பதாக கூறி வந்த பர்வீன் பானு, தன் கணவரிடம் நெருங்கி பழகாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென வயிற்று வலி அதிகமாகவே ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு இருவரும் சென்றுள்ளனர்.

* அப்போது மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்ற பர்வீன் பானு, அங்கு அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். கழிவறைக்கு சென்ற மனைவி கையில் குழந்தையுடன் வந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அஜீஸ், மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

* பிரசவத்திற்காக அனுமதிக்கப்படாத போதிலும் பர்வீன் பானு மருத்துவமனை வளாகத்திற்குள் குழந்தையை பெற்றெடுத்ததால் மருத்துவமனை ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

* திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயராக யார் பெயரை பதிவு செய்வது என்ற குழப்பத்திலும் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளனர். பர்வீன்பானு வாய் திறந்தால் மட்டுமே உண்மை தெரியும்.

X

Thanthi TV
www.thanthitv.com