கூவத்தில் கோரமாக கிடந்த ஆண் சடலம் - குடோனில் கட்டி வைத்து அடித்த 5 பேர்..
சென்னை ஏழுகிணறு பேசின்பாலம் கூவம் ஆற்றின் அருகே ரத்த காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் , திருப்பதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலி ராயுடு என்பவரை சிவகுமார், கோபி, தாசர், சந்திரபாபு, உட்பட 5பேர் இறந்த நபரை சித்ரவதை செய்தது அம்பலமானது. மேலும் அவர் தங்களிடம் பணியாற்றிவிட்டு எதிர்தரப்பை சேர்ந்தவர்களிடம் பணம் வாங்கி கொண்டு தங்களுக்கு துரோகம் இழைத்ததால் , குடோனில் கட்டி வைத்து அடித்ததாகவும், இதனால் ஸ்ரீனிவாசலி தற்கொலை செய்து கொண்டதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
