கடலில் மிதந்த ஆண் சடலம்... அதிர்ந்த துறைமுகம்... குமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன் பிடித்துறைமுகத்தில் மிதந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள கடலில் சடலம் ஒன்று மிதப்பதாக கடலோர காவல் குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, யாருடைய சடலம் என விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியைச் சேர்ந்த 55 வயதான செல்வம் என தெரிய வந்தது.
இவர் சின்னமூட்டம் பகுதியில் சடலமாக காணப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
