Cuddalore Car | ``தன் காரை தானே திருடிய நபர்..’’ - சிசிடிவியில் வசமாக சிக்கி அம்பலம்

x

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் காரை அடமானம் வைத்து கடன் பெற்ற நபர், பணத்தை திரும்ப கொடுக்காமல் காரை திருடிச் சென்றுள்ளார். சிதம்பரத்தை சேர்ந்த நாகராஜன் என்பவரிடம், வெங்கடேசன் என்பவர் தனது காரை அடமானமாக வைத்து ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனை திரும்ப செலுத்திவிட்டு காரை மீட்டு செல்லுமாறு, வெங்கடேசனிடம் நாகராஜன் பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காத வெங்கடேசன், நாகராஜன் வீட்டின் முன்பு நின்ற காரை பூட்டை உடைத்து திருடிச்சென்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்