தமிழகத்தையே கலக்கிய ஒருவன்.. 1 நொடி அதிர்ந்த போலீஸ்
தமிழகம் முழுவதும் 7 டாஸ்மாக் கடைகளில் துளையிட்டு கொள்ளையடித்த திருடனை கோவிலில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த நபரை விசாரணை செய்தபோது 7 டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடித்தது அம்பலமானது. அவரிடம் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Next Story
