உணவகத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் தர மறுத்து தகராறு..!

சென்னை வண்ணாரப்பேட்டையில், தனியார் துரித உணவகத்தில் உணவருந்திவிட்டு, பணம் தர மறுத்து ஊழியர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தினேஷ், அஜீத் ஆகிய இருவர், சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட கார்த்திக் என்ற ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கார்த்திக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com