ஈரோட்டில் கஞ்சா போதையில் வடக்கு நபர் செய்த பயங்கரம் - அடித்தே கொன்ற மக்கள்

x

ஈரோடு அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை கொடூரமாக தாக்கிய இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரோடு கொல்லம்பாளையம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயலட்சுமி ஆகிய வயதான தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா போதையில் இருந்த வடமாநில இளைஞர் ஓருவர் திடீரென வீட்டில் நுழைந்து சுப்பிரமணியத்தின் கழுத்தை அறுத்தும், ஜெயலட்சுமியை கட்டையால் தாக்கிவிட்டும் தப்பியோடியுள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தப்பி ஓடிய இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். .


Next Story

மேலும் செய்திகள்