பிணம் போல் வேடமணிந்து ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த நபர்- பரபரப்பு காட்சி
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, தனக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து, முறைகேடாக விற்ற தம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி, பிணம் போல் வேடமணிந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்றம்பள்ளியில் மணி என்பவரின் ஐந்தாவது மகன் கதிர்வேல், தனது உடன் பிறந்தவர்களுக்கு சொத்துகளை பிரித்துக் கொடுக்காமல், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்று மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த கதிர்வேலின் அண்ணன் வாசு, நிலத்தை முறைகேடாக விற்க உடந்தையாக இருந்த கிராம நிர்வாக அலுவலர் உள்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, பிணம்போல் வேடமிட்டு மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story