நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற நபர்

x

சங்கரன்கோவிலில் நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோவிலை சேர்ந்த புகழேந்தி என்பவர் தனது பக்கத்து வீட்டுகாரரான காவலர் ஒருவர் மீது அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நீதிமன்ற வளாகத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் தீ குளிக்க முயற்சி செய்தார். உடனடியாக அவரை போலீசார் தடுத்தனர். மேலும் அங்கிருந்த பெண் காவலர்கள் குழந்தைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அழுத குழந்தைகளை சமாதானம் செய்தனர். மேலும் போலீசார் விசாரனையில் புகழேந்தி மீது வழக்குகள் இருப்பதும், மது போதையில் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்