Tollgate | டோல்கேட்டில் வந்தது அதிரடி மாற்றம்.. எல்லாம் நல்ல செய்தி தான்..!

டோல்கேட்டில் வந்தது அதிரடி மாற்றம்.. எல்லாம் நல்ல செய்தி தான்..!

மாற்றுத்திறனாளிகளுக்கான சுங்கக்கட்டண விலக்கில் புதிய மாற்றம் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்குச் சுங்கச்சாவடிகளில் வழங்கப்படும் கட்டண விலக்கிற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன... சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கிற்கு ஆண்டுதோறும் புதுப்பிப்பது கட்டாயமாக இருந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளின் பாதிப்பு சதவீதத்திற்கு ஏற்ப பாஸ்டாக் விலக்கு செல்லுபடியாகும் காலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 70 முதல் 100 சதவீதம் வரை மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு 5 ஆண்டுகளும், 40 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு 3 ஆண்டுகளும் FASTag விலக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த புதிய நடைமுறை அக்டோபர் 2 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகள் ஆண்டுதோறும் FASTag விலக்கை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாற்றுத்திறனாளியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனம் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும்... இதற்காக UDID அட்டை அல்லது மருத்துவச் சான்றிதழுடன் NHAI Exempted FASTag Portal-ல் விண்ணப்பிக்கலாம் எனவும், 1033 என்ற NHAI உதவி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com