கண் இமைக்கும் நொடியில் நடந்த பெரும் விபத்து - நொறுங்கிய வாகனங்கள்
விபத்தில் சிக்கிய தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்தை மீட்டுக்கொண்டு ரெக்கவனி வாகனம் ஒன்று பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்துக் கொண்டிருந்தது
திருச்சி மாவட்டம் , நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து கூத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது அதே திசையில் வெல்ல மூட்டைகள் ஏற்றி வந்த லாரி பேருந்தின் பின்னால் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து லாரிக்கு பின்னால் வந்த மற்றொரு லாரியும் விபத்துக்குள்ளான லாரியின் பின்னால் மோதி கண் இமைக்கும் நேரத்தில் அடுத்து விபத்து ஏற்பட்டது.
இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் 3 கிலோ மீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நின்றது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விபத்துக்குள்ளான வாகனங்களை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
