kallakurichi | காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி; இரு வீட்டார் மோதல்

x

உளுந்தூர்பேட்டை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த நிலையில், இரு வீட்டாரும் காவல் நிலையத்தில் மோதிக் கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைச் சேர்ந்த சண்முகம், ஷர்மிதா ஆகிய இருவம் காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தகவல் அறிந்து காவல் நிலையத்திற்கு வந்த இரு வீட்டாரும் தாக்கிக் கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்