கொஞ்சம் விளையாட்டு... நிறைய அன்பு..."பொம்மி' யானைக்கு அழகா உணவு ஊட்டிவிட்ட ஜனாதிபதி திரெளபதி முர்மு

x

அங்கு வளர்ப்பு யானை முகங்கள் பார்த்து பின்னர் ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் தோன்றிய பொம்மி யானைக்கு கரும்பு வழங்கினார்.

பின்னர் யானை பாகங்ன்களோடு உரையாடுகிறார்.

ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன்-பெள்ளி தம்பதியினரை நேரில் சந்தித்து வாழ்த்து

4 நாள் பயணமாக இன்று மாலை தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதிக்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சென்றார்..

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் வரவேற்கின்றனர். அதனை தொடர்ந்து வளர்ப்பு யானைகளுக்கு உணவளிப்பதை பார்வையிடும் அவர் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் பணியாற்றும் 27 யானை பாகங்கள் மற்றும் டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து வந்துள்ள 10 யானை பாகங்கள் உள்பட 37 யானை பாகங்களை சந்திக்கிறார். அப்போது மூத்த யானை பாகன்களான கிருமாறன், தேவராஜ் முருகேஷ், சுரேஷ், பொம்மன் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.

அதனை தொடர்ந்து ஆஸ்கர் நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியினரை சந்தித்த பின்னர் மசினகுடிக்கு திரும்பி வரும் குடியரசு தலைவர் ஹெலிகாப்டர் மூலம் மைசூர் சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார்.

இதனிடையே முகாமிற்கு வரும் குடியரசு தலைவரை கவரும் விதமாக உண்ணி செடி மூலம் உருவாக்கபட்ட 2 குட்டி யனைகள் உள்பட 8 யானை பொம்மைகள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி மசினகுடி மற்றும் முதுமலை சுற்றுவட்டார பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்