ஒய்யாரமாக அமர்ந்துள்ள சிறுத்தை.. தருமபுரி கிராம மக்கள் அச்சம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமம் அருகே உள்ள மலை உச்சியில் சிறுத்தை ஒய்யாரமாக அமர்ந்துள்ள காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்கு சுற்றுவட்டார கிராமங்களை ஒட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மூன்று சிறுத்தை புலிகளின் நடமாட்டம் இருப்பதாக மலை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற சிலர் கூறிய நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் இந்த வீடியோ மக்களை மேலும் பீதி அடையச் செய்துள்ளது.
Next Story
