வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சி

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வளர்ப்பு நாயை வேட்டையாடி தூக்கி சென்ற சிறுத்தையின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையம் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்த நவீன் என்பவரின் வளர்ப்பு நாய் காணவில்லை. மேலும் நாய் படுத்திருந்த இடத்தில் ரத்தம் கறை இருந்ததுடன், பெரிய அளவில் கால்தடம் பதிந்திருப்பதைப் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்த போது, சிறுத்தை வளர்ப்பு நாயை வேட்டையாடி தூக்கி சென்றது தெரியவந்தது. இந்த காட்சிகள் வைரலானதை தொடர்ந்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்