ஊருக்குள் புகுந்து நாயை கவ்விச்சென்ற சிறுத்தை - அதிர்ந்து போன ஊர்மக்கள்..

x

உதகையில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, வளர்ப்பு நாயை வேட்டையாடிச் சென்றது. உதகை அரசு மருத்துவமனை அருகே உள்ள பட்பயர் என்னும் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை, பதுங்கி இருந்து நாயை கவ்வி சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம குடியிருப்பு பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்