Thirupparankundram Deepathoon| தீபத்தூணில் ஏறும் `தீபம்?’ - சிவப்பு மண்டலமாக மாறிய மலை

தீபத்தூணில் ஏறும் `தீபம்?’ - சிவப்பு மண்டலமாக மாறிய மலை

#thirupparankundramdeepam #thirupparankundramdeepathoon #deepathoon பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. உச்சநீதிமன்ற நிபந்தனைகளின்படி, கோயில் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதையொட்டி, சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதியைப் பாதுகாக்கும் வகையில், மதுரை மாவட்டம் முழுவதும் பி.என்.எஸ்.எஸ். பிரிவு 163-ன் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணிக்கு அமலுக்கு வந்த இந்தத் தடை, நாளை காலை 10 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காக 12 காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 5 ஆயிரத்து 618 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை காலை 6 மணி வரை திருப்பரங்குன்றம் மலை மீது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதி மற்றும் கிரிவலப் பாதைகள் 'ரெட் ஜோன்' (Red Zone) ஆக அறிவிக்கப்பட்டு டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது போலீசார் செல்போன் கொண்டு செல்லவோ, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்களைத் தவிர வேறு யாரும் படம் பிடிக்கக் கூடாது எனக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் திருமணம், இறுதிச் சடங்குகள் மற்றும் மலை மீதுள்ள தர்காவில் வழிபாடு உள்ளிட்ட வழக்கமான மத வழிபாடுகள் காவல்துறை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X