திடீரென தீப்பற்றி எரிந்த வீடு.. தரையில் புரண்டு கதறி அழுத தாய், மகள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கேஸ் கசிவினால் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்தது.
வந்தவாசி அச்சரப்பாக்கம் சாலையில் வசித்து வரும் சரவணன் மனைவி விஜி, காலையில் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென சிலிண்டரின் டியூப் எரிந்ததால் கூரை வீட்டில் தீ பற்ற தொடங்கியது. பின்னர் தீ மள மளவென பற்றி கூரை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் வீட்டில் இருந்த பொருட்கள், குழந்தைகளின் பாடப் புத்தகங்கள், சான்றிதழ்கள் மற்றும் துணிமணிகள் என அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
