Salem இரக்கமே இல்லாத மிருகம்...சைலெண்டாக பின்னாடியே செய்த காரியத்தை பாருங்க - கதறிய 70 வயது பாட்டியை
இரக்கமே இல்லாத மிருகம்...சைலெண்டாக பின்னாடியே செய்த காரியத்தை பாருங்க - கதறிய 70 வயது பாட்டியை
#salem | #crimenews | #viralvideo
இரக்கமே இல்லாத மிருகம்... சைலெண்டாக பின்னாடியே செய்த காரியத்தை பாருங்க - கதறிய 70 வயது பாட்டியை சேலம் செவ்வாய்பேட்டையில், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மூதாட்டியிடம் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் 3 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்த்தநாரி தெருவில் நடந்து சென்ற 70 வயதான அம்சவல்லியை நோட்டமிட்ட மர்ம நபர், அவரது கழுத்திலிருந்த நகையைப் பறித்துத் தப்பியோடியுள்ளார். நகைப் பறிப்பின்போது மூதாட்டி கீழே விழுந்து காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகைப் பறிப்பு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
