சிறுவனின் காதை கடித்து குதறிய கொடூரம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த முகமது தல்ஹா என்ற 6 வயது சிறுவனை குரங்கு ஒன்று விரட்டி காதில் கடித்துள்ளது. அலறிய சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ஏற்கனவே இதே பகுதியில் ஒரு முதியவரையும் குரங்கு கடித்துள்ளதாகவும், குடியிருப்பு பகுதிகளில் சுற்றி தெரியும் குரங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story