திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பட்டதாரி பெண்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பட்டதாரி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பட்டதாரி பெண்
Published on
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பட்டதாரி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. உறையூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் வீட்டை அவரது சகோதரர் குணசேகரன் என்பவர் இடித்து தரைமட்டமாக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்துக்கு மனு கொடுக்க முருகேசன் தனது குடும்பத்துடன் வந்த போது, அவரின் மகள் காவேரி, பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com