திடீரென கழன்று ஓடிய அரசு பேருந்தின் டயர் -மிரண்டுபோன பயணிகள்
செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு சென்ற அரசு பேருந்தின் முன்பக்க டயர் திடீரென கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். ஆத்தூர் அருகே காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் நெடுஞ்சாலையில் இந்த அரசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்தின் முன்பக்க டயர், கழன்று ஓடியதால் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இதனால், நடுரோட்டில் தவித்துக் கொண்டு இருந்த பயணிகள் பலரும், அரசு பேருந்துகளை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முறையாக பராமரிப்பது இல்லை எனவும் இதனால் தான், இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டினர். ஆகவே, இந்த சம்பவத்திற்கு பிறகாவது, அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
