நொடி பொழுதில் இழுத்த ராட்சத அலை... கடலில் குளிக்கும் போது உஷார்
நொடி பொழுதில் இழுத்த ராட்சத அலை... கடலில் குளிக்கும் போது உஷார்
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே, கடல் அலையில் சிக்கித் தவித்த இரண்டு கர்நாடக மாநில இளைஞர்களை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர்களான கவுதம் மற்றும் கிரண், ஆரோவில் கடற்கரை தந்திராயன் குப்பம் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில், இருவரையும் கடலோர காவல்படையினர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.
Next Story