இப்படி ஒரு முன்னாள் மாணவரா! - நன்றி மறக்காமல் பள்ளிக்கு செய்த சேவை...கொண்டாடும் மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே முன்னாள் மாணவர் ஒருவர் தான் படித்த அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள பழைய கட்டிடத்தை 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்து தந்த செயல் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. 1965 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது 91 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியின் கட்டிடம் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையறிந்த இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் நடராஜன் என்பவர் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழைய ஓட்டு கட்டிடத்தை சீரமைத்து தனது தாய் தந்தையர் கையால் இந்த பள்ளியின் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
Next Story
