ஆளை அடித்துச்செல்லும் வெள்ளம் - கயிறு கட்டி இறுகப்பிடித்த மக்கள் - திக் திக் காட்சி...

தொடர் கனமழை காரணமாக, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே, அத்தி கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, மதுரை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்து அத்தி தர்காவுக்கு வந்த 50க்கும் மேற்பட்டோர், ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு துறையினர், கயிறு கட்டி அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com