tiruvallur | strom |சென்னை அருகே அதிர்ச்சி நடுக்கடலில் பாய்ந்த மின்னல் நொடிப்பொழுதில் கருகிய மீனவர்

சென்னை அருகே அதிர்ச்சி நடுக்கடலில் பாய்ந்த மின்னல் நொடிப்பொழுதில் கருகிய மீனவர்

tiruvallur | strom |சென்னை அருகே அதிர்ச்சி நடுக்கடலில் பாய்ந்த மின்னல் நொடிப்பொழுதில் கருகிய மீனவர் #triuvallur #death #strom #sea திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். சாத்தான்குப்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம், கார்த்திக், சத்தியவாசன் ஆகிய 3 பேர் படகில் ஆந்திர கடலோரப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது. இதில் சத்தியவாசன் மயங்கி படகில் விழுந்த நிலையில், ஆறுமுகம் மற்றும் கார்த்திக் காயமடைந்தனர். சக மீனவர்கள் உதவியுடன் மூவரும் பழவேற்காடு கரைக்கு அழைத்து வரப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சத்தியவாசன், 38, வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.காயமடைந்த ஆறுமுகம், கார்த்திக் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com