2 வயது குழந்தையை இழந்து தவித்த பெற்றோருக்கு கடைசியாக வந்த நிம்மதி செய்தி

x

ராமேஸ்வரத்தில், கோயில் பகுதியில் காணமல் போன பெண் குழந்தை, நீண்ட நேரத்திற்கு பிறகு அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராமநாத சுவாமி கோயில் அருகே உள்ள தனியார் உணவகத்திற்கு, பெற்றோர் தங்களது இரண்டரை வயது குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த குழந்தையை விட்டு விட்டு அதன் பெற்றோர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், தனியார் உணவகத்தில் குழந்தை பரிதவித்து நின்று அழுது கொண்டே இருந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அந்தக் குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்