ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடக்கும் விழா - சனீஸ்வர பகவானை பார்க்க திரண்ட ஏராளமான பக்தர்கள்
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உலக பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனிபகவான் ஆலய பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இவ்விழாவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சனிபகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
