ஹாஸ்பிடலில் திமிராக பேசி லஞ்சம் கேட்ட பெண் ஊழியர் - வீடியோ எடுத்து வெளியிட்ட ரிப்போர்ட்டர்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மகப்பேறு சிகிச்சை முடிந்த பெண்ணின் குடும்பத்தாரிடம், ரத்தக்கரை படர்ந்த துணிகளை துவைக்க பவுடர், சோப்பு வாங்கி வரச் சொல்லியும், லஞ்சமாக பணம் கேட்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் வேலை செய்வதற்கு சித்தாள் வேலைக்கு போகலாம் என ரைமிங்காக பேசும் பெண், ஆயிரத்து 500 ரூபாய் கொடு என அதிகாரமாக கேட்டுள்ளார். இதுகுறித்து திருக்கோவிலூர் முதன்மை மருத்துவ அலுவலரிடம் கேட்டபோது, பணம் பெற்ற நபர் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்