Dindigul | Land Scam | ஆசைவார்த்தையை நம்பி லட்சக் கணக்கில் பறிகொடுத்த விவசாயி
Dindigul | Land Scam | ஆசைவார்த்தையை நம்பி லட்சக் கணக்கில் பறிகொடுத்த விவசாயி #dindigul #landscam #thanthitv விவசாயியிடம் ரூ.36 லட்சம் மோசடி - ரியல் எஸ்டேட் பிரமுகர் கைது திண்டுக்கல்லில் விவசாயிடம் 36 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு.... திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், விவசாயியிடம் சுமார் 36 லட்சம் ரூபாய் மோசடி செய்த ரியல் எஸ்டேட் பிரமுகர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வாகரை பகுதியை சேர்ந்த முருகசாமி என்பவரிடமிருந்து, பிரபு என்பவர் கோவை மாவட்டத்தில் நிலம் வாங்கி தருவதாக கூறி, 60 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், கிரையம் எழுதி கொடுக்காமல் கடந்த 3 ஆண்டுகளாக அவரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதில், 25 லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பி கொடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 35 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து முருகசாமி அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, ரியல் எஸ்டேட் பிரமுகர் பிரபுவை கைது செய்தனர்.
