பிரபல பேங்க் செய்த தில்லாலங்கடி... தரமான ரிவெஞ்ச் எடுத்த கஸ்டமர்...
வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்த வங்கி 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த குமார் என்பவர் மன்னார்குடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் பல்வேறு கடன்கள் பெற்று அதற்கு வட்டி மற்றும் தவணை தொகைகள் முறையாக செலுத்தி வருகிறார். இந்நிலையில் தனது சிபில் ஸ்கோர் குறைந்து வருவதை அறிந்த குமார், வங்கியில் சென்று கேட்டதற்கு, மற்றொருவர் வாங்கிய கடனுக்கு குமாரை ஜாமின்தாரராக சேர்த்ததாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலைடைந்த குமார் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த ஆணையம் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக பகிர்ந்ததால் வங்கி குமாருக்கு நஷ்டஈடாக 50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது
