காதல் திருமணம்.. சாதி பெயர் சொல்லி மிரட்டும் சின்ன மாமனார்.. புகாரோடு வந்த இளம்பெண்

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை, தொடர்ந்து சாதி பெயர் சொல்லி திட்டி வந்தததாக சின்னமாமனார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பூதிபுரத்தை சேர்ந்த தம்பதி, காளீஸ்வரன்-ஷாலினி. வேறு வேறு சமுதாயத்தை சேர்ந்த இவர்கள் கடந்த இரன்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இவர்களை இருவீட்டாரும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் காளீஸ்வரனின் சித்தப்பா குடும்பத்தினர் தொடர்ந்து ஷாலினியை சாதி பெயர் சொல்லி திட்டியும் மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்