ஒற்றை தீப்பெட்டியால் ஏற்பட்ட மோதல் - பறிபோன உயிர்
தீப்பெட்டிக்காக தகராறு - கொலைவெறி தாக்குதலில் ஒருவர் பலி - 4 பேர் கைது
தீப்பெட்டிக்காக ஏற்பட்ட தகராறில், ஒருவர் உயிரிழந்த நிலையில் மதுபோதையில் கண்மூடித்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த போலீஸ் விசாரணையில், சம்பவத்தன்று மைலம்பாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மணிகண்டன், பரத், தினேஷ், நந்தகோபால் ஆகிய 4 பேர் மதுபோதையில் இருந்தபோது, அங்கு வந்த சங்கர் என்பவரும் மதுபோதையில் வந்து தீப்பெட்டி கேட்டு நக்கல் செய்தது கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த மணிகண்டன், மைலம்பாடி அருகே உள்ள ஆலமரம் பேருந்து நிறுத்தத்தில் சங்கரை மீண்டும் பார்த்த 4 பேரும், நீ இன்னும் போகவில்லையா? என கேட்டதும், சங்கரும் பதிலுக்கு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மேலும் ஆத்திரமடைந்த 4 பேரும் தாங்கள் கொண்டு வந்த நைலான் கயிறால், சங்கரை சரமாரியாக கொலைவெறியுடன் தாக்கியது, தெரியவந்தது. இதனிடையே, 4 பேரும் இதை போலீசில் ஒப்புக்கொண்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த சங்கர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
