மின்னல் வேகத்தில் மோதிய கார்.. வெடித்து சாய்ந்த மின்கம்பம் - அதிர்ச்சி காட்சி
ஆம்பூர் அருகே சாலையில் சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் முகமது என்பவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் கார் மோதியதில் சாலையோரம் உள்ள மின்கம்பம் சேதமடைந்ததால், சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
