Tiruvallur || மாநகர பேருந்து மீது மோதிய கார் - கணவன், மனைவி பலி
Tiruvallur || மாநகர பேருந்து மீது மோதிய கார் - கணவன், மனைவி பலி #Tiruvallur #accident #thanthitv திருவள்ளூர் அருகே மாநகர பேருந்து மீது கார் மோதிய விபத்தில், கணவன் - மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், மனைவி கீதா மற்றும் பேத்திகள் உடன் காரில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். செவ்வாபேட்டை அருகே சென்றபோது ரவிச்சந்திரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, கார் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தில் மோதியது. இந்த விபத்தில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கீதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரில் இருந்த பேத்திகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
