சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானியிடம் கைவரிசை காட்டிய கம்போடியா கும்பல்

x

சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானியும், பத்ம பூஷன் விருதுபெற்ற ராமசாமியிடம் 57 லட்ச ரூபாய் மோசடி செய்தது, கம்போடியா கும்பல் என தெரியவந்துள்ளது.

சென்னையில் வசித்து வரும் மத்திய அரசின் முன்னாளக் செயலாளர் ராமசாமி என்பவருக்கு வந்த அழைப்பில் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாகவும் சட்டவிரோத சிம்கார்டு வாங்கி நூதன மோசடி செய்துள்ளதால் உடனடியாக டெல்லி காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு கூறியுள்ளார். இதனை ராமசாமி மறுத்த போதும், அவரின் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கை போலியாக தயாரித்து அந்த கும்பல் மிரட்டியுள்ளது. மேலும் நூதனமுறையில் அவரது வங்கி கணக்கில் இருந்து அந்த கும்பல் 57 லட்சம் ரூபாயையும் பறித்து கொண்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட ராமசாமி போலிசாரிடம் புகார் அளித்த போது கம்போடியா கும்பல் இந்த கைவரிசையை காட்டியது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்