முதல்முறையாக ஊருக்குள் வந்த பஸ் - சாலையில் விழுந்து வணங்கிய பெண்

x

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, முதல்முறையாக தங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடைத்த‌தை அடுத்து, பெண் ஒருவர் சாலையில் விழுந்து வணங்கி ஏறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாளரக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் மக்கள், 2 கிலோ மீட்டர் நடந்து பாளையக்குடிக்கு சென்று பேருந்தில் பயணிக்கும் நிலை இருந்த‌து. இந்நிலையில், புதிதாக மினி பேருந்து சேவை, வாளரக்குறிச்சி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, தங்கள் பகுதிக்கு முதன்முறையாக பேருந்து வந்த‌தும், அப்பகுதி மக்கள், சூடம் ஏற்றி பூஜை செய்து வரவேற்றனர். அப்போது, பெண் ஒருவர் சாலையில் விழுந்து வணங்கி, தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி கிடைத்த‌தற்கு நன்றி தெரிவித்து, பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்