ADMK | Rekla Race | அதிமுக சார்பில் மேலூரில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்

அதிமுக சார்பில் மேலூரில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்

ADMK | Rekla Race | அதிமுக சார்பில் மேலூரில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள் #admk #reklarace #thanthitv இரட்டை மாட்டுவண்டி பந்தயம் – உற்சாகமாக கண்டு ரசித்த பொதுமக்கள் மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூரில் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மேலூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியை மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மொத்தம் 35 ஜோடி மாடுகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது. சாலையின் இருபுறமும் நின்ற பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com