சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து கோமா நிலைக்கு சென்ற சிறுவன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை 15 வயது சிறுவன் மிதித்து கோமா நிலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரப்புவிலை பகுதியை சேர்ந்த ஜெயசிங் என்பவரது 15 வயது மகன் விஷ்வா நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்துள்ளார். இதனால் அலறி கீழே விழுந்த, சிறுவனை மீட்ட பொதுமக்கள், தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது சிறுவன் விஷ்வா, கோமா நிலையில் உள்ளதால், உயர் தர சிகிச்சை அளிக்க அரசு உதவிட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com