குடியிருப்பில் உலா வந்த கருஞ்சிறுத்தை - மக்கள் அச்சம்
குன்னூர் அருகே குடியிருப்பில் உலா வந்த கருஞ்சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அட்டடி கிராமத்தில் இரவில் கருஞ்சிறுத்தை ஒன்று அந்த கிராம சாலை வழியாக நடந்து சென்று அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கருஞ்சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
