கொதிக்கும் எண்ணெய் ஊற்றி ஆசிரியர் உயிரை எடுக்க விபரீத முயற்சி

x

கொதிக்கும் எண்ணெய் ஊற்றி ஆசிரியரை கொல்ல முயற்சி - 2 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடனை திருப்பி கேட்ட ஆசிரியர் மீது, கொதிக்கும் எண்ணெ ஊற்றி கொல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருமணியை சேர்ந்த ஆசிரியர் குமார் என்பவரிடம், முகநூலில் பழக்கமான ராணிப்பேட்டை மாவட்டம் குப்பிடிசாத்தத்தை சேர்ந்த முனுசாமி, டீக்கடை வைப்பதற்காக 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு, டீக்கடைக்கு சென்று கடனை திருப்பிக்கேட்ட குமாரை, ஆபாசமாக திட்டி, கொதிக்கும் எண்ணெயை முனுசாமி ஊற்றியுள்ளார். பலத்த தீக்காயம் அடைந்த குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், முனுசாமி, டீக்கடை ஊழியர் ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான முனுசாமியின் சகோதரி இந்துமதியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்