தொழிற்சாலையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து சாக்லெட் தேடிய கரடி.. அதிர்ச்சி சிசிடிவி
நீலகிரி மாவட்டம், குன்னூரில் சாக்லெட் தொழிற்சாலையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடி, சாக்லெட்டுகளை தேடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள சாக்லெட் தொழிற்சாலையின் கதவை உடைத்து உள்ளே சென்ற கரடி சாக்லெட்டை தேடி அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது. பின்னர் அந்த கரடி அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. இதுவரை 8 முறை கதவை உடைத்து சாக்லெட்டை ருசித்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
