3 மணிநேரம் இடைவிடாது பரத நாட்டியமாடி 7 வயது சிறுமி உலக சாதனை

x

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தனியார் அரங்கில், 7 வயது சிறுமி நிதர்சனா இடைவிடாமல் தொடர்ந்து 3 மணிநேரம் பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்துள்ளார்.

கண்ணன் - சங்கீதாவின் மகள் நிதர்சனா சிறுவயது முதலே ஆர்வத்துடன் பரத நாட்டியம் பயிற்சி பெற்று, தொடர்ந்து 3 மணி நேரம் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். சிறுமியின் இந்த முயற்சியை தி கிங்டம் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்து பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கியது.


Next Story

மேலும் செய்திகள்