பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த 6 அடி நீள நாகப்பாம்பு | அதிர்ச்சி வீடியோ
பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த 6 அடி நீள நாகப்பாம்பு
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பண்ணை வீட்டில் பதுங்கி் இருந்த நாகப்பாம்பு மீட்கப்பட்டது.
காகம் பகுதியில் உள்ள மோகனசுந்தரம் என்பவரின் பண்ணை வீட்டில் பாம்பு ஊர்ந்து வந்ததை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பாம்பு பிடி வீரர் யுவராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் அங்கு வந்த யுவராஜ் பண்ணை வீட்டில் உள்ள புறா கூண்டு பகுதியில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் ஈரோடு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது.
Next Story
