சிறுவன் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்...ஸ்கேனில் வெளிவந்த அதிர்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில்
5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவன் சுதன்மூர்த்தி ஏழாம் வகுப்பு படித்து வரும்
நிலையில், தன்னுடைய அம்மாவிடம் இருந்து 5 ரூபாய் காயின் ஒன்றை வாங்கிக்கொண்டு தின்பண்டம் வாங்குவதற்காக கடைக்கு சென்ற நிலையில், காயினை வாயில் போட்டு விளையாடிக்கொண்டே சென்றதால் எதிர்பாராத விதமாக நாணயத்தை அவர் விழுங்கியுள்ளார். சிறுவனின் தொண்டை பகுதியில் நாணயம் சிக்கியுள்ள நிலையில், அதனை வெளியே கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ஈடுபட்டனர்.
Next Story
