Sand Quarry|``3 அடிக்கு அனுமதி வாங்கி 30 அடிக்கு தோண்டப்பட்ட மண் குவாரி’’ - வைரலாகும் ட்ரோன் காட்சி
``3 அடிக்கு அனுமதி வாங்கி 30 அடிக்கு தோண்டப்பட்ட மண் குவாரி’’ - வைரலாகும் ட்ரோன் காட்சி
மண் குவாரியில் விதிமீறி கனிம வளம் சுரண்டப்படுவதாக குற்றச்சாட்டு திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே பன்பாக்கம் ஏரியில், சாலைப் பணிகளுக்காக அனுமதி பெற்ற மண் குவாரியில் விதிமீறி கனிம வளம் சுரண்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 3 அடி ஆழத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சுமார் 30 அடி ஆழம் வரை மண் தோண்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மண் எடுத்துச் செல்லப்படுவதால் நிலத்தடி நீர் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குவாரியின் பருந்துப் பார்வைக் காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
