வானகரத்தில் 9வது மாடியில் இருந்து குதித்து +2 மாணவர் தற்கொலை

x

சென்னை வானகரத்தில், 9வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வானகரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் யாதேந்திர பாபு என்பவரது மகன் ஐஸ்வர், அயப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இரவில் வீட்டில் உள்ள அறையில் ஐஸ்வர் படித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அவரது தந்தை, படிப்பதை நிறுத்திவிட்டு உறங்குமாறு கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், நள்ளிரவில் ஐஸ்வர், 9வது மாடியில் இருந்து குதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்