தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். குணால் உத்தம் ஷ்ரோட் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கும், அர்பிதா ராஜ்புத் காங்கேயத்திற்கும், ரேகா நாங்லோட் குளச்சலுக்கும், பி.ஆர்.மீரா ராமேஸ்வரத்திற்கும், ஆஷிஷ் புனியா காரைக்குடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ஜி.அஸ்வினி மதுரை மாவட்டம் பேரையூருக்கும், தனுஷ் குமார் வேலூருக்கும், சுபாஷ் சந்த் மீனா சேலம் மாவட்ட ரூரல் பகுதிக்கும், ஷுபம் திமான் திருத்தணிக்கும் உதவி காவல் கண்காணிப்பாளர்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
